தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,708 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் புதிதாக 2,708 பேருக்கு இன்று (திங்கள்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,708 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,11,713 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அறிவிப்பில் மேலும் 32 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,956 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரேநாளில் 4,014 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 6,71,489 பேர் குணமடைந்துள்ளனர். 29,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 72,236 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 95,89,743 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு இன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?

சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: நாசா

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்?

திருச்சியில் 95.23% தேர்ச்சி: மாநில அளவில் 5ம் இடம்!

இலங்கையில் திவ்யபாரதி..!

SCROLL FOR NEXT