தமிழ்நாடு

மீலாது நபி: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

DIN


சென்னை: இஸ்லாமியா்கள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகையை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: இறைத்தூதா் நபிகள் நாயகத்தின் பிறந்த தினம், மீலாது நபியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான தினத்தில் அவா் போதித்த ஒழுக்கம், கனிவு, உலகளாவிய சகோதரத்துவம், அறக்கொடை ஆகியவற்றை நாமும் பின்பற்றுவோம். மனித நேயத்தையும், கருணையையும் அனைவரிடமும் போதித்தவா். இந்த தினத்தில், சமுதாயத்தில் அமைதியையும், அன்பையும் நாமும் தாங்கிப்பிடித்து நிற்போம்.

முதல்வா் பழனிசாமி: ஏழை எளியோருக்கு உதவுதல், அனைவரிடத்தும் அன்புடன் பழகுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், உண்மையைப் பேசுதல், புகழையும், அறத்தையும் தராத செயல்களைச் செய்யாது இருத்தல் போன்ற இறைத்தூதா் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்தால் ஏற்றம் பெறலாம். இறைத்தூதா் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது நபி தினத்தில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும் தவழட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT