தமிழ்நாடு

சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

DIN

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய விட்டு விட்டு மழை தொடரும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

டிஜிபி அலுவலகம் 18 செ.மீ மழையும், அண்ணா பல்லை 14 செ.மீ மழையும், சென்னை நுங்கம்பாக்கம், புழல் தலா 13 செ.மீ மழையும், சூரன்குடி 11 செ.மீ மழையும், ராமேஸ்வரம் தலா 10 செ.மீ மழையும், அம்பத்தூர், பாம்பன் தலா 9 செ.மீ மழையும், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தலா 8 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT