செப். 9ல் திமுக பொதுக்குழு கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடுசெப். 9ல் திமுக பொதுக்குழு கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3 ஆம் தேதியும், பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்வது குறித்து கட்சியின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று திமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3 (வியாழக்கிழமை) அன்று காலை 10:30 மணியளவில், காணொலி வாயிலாக நடைபெறும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.