தமிழ்நாடு

உலகளவில் கரோனா பாதிப்பு 2.56 கோடியை எட்டியது

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.56 கோடியை எட்டியது.  இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.54 லட்சமாக உள்ளது.

உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 25,634,102 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 8,54,763 ஆக உள்ளது.  கரோனா பாதித்த 2.56 கோடி பேரில் 1.79 கோடிப் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 62,11,796 பேரும், பிரேசிலில் 39,10,901 பேரும், இந்தியாவில் 36,87,939 பேரும், ரஷியாவில் 9,95,319 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,79,39,176 ஆக உள்ளது. தற்போது 68,40,163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 61,160  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT