முகப்பு
தமிழ்நாடு

மூன்று மாதங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தள்ளிவைக்க வேண்டும்: த.மா.கா. வலியுறுத்தல்

கரோனா தொற்று பரவல் நிலையில், மக்களுக்கு உதவும் வகையில் இன்னும் மூன்று மாதங்களுக்கு அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும், என த.மா.கா. வலியுறுத்தியுள்ளது. 

Updated On : 1 செப்டம்பர், 2020 at 6:59 PM
த.மா.கா., இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:44 PM

கரோனா தொற்று பரவல் நிலையில், மக்களுக்கு உதவும் வகையில் இன்னும் மூன்று மாதங்களுக்கு அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும், என த.மா.கா., இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேட்டுக் கொண்டார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. பலர், பணியை இழந்தும், ஊதியம் கிடைக்காமலும், வருவாயை இழந்துள்ளனர். பல நிறுவனங்களே பாதிக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக செயல்பட அனுமதி அளித்து வருகிறது. இதனால், வியாபாரம் பாதிக்கிறது.

Advertisement

ஊரடங்கால், மார்ச், 15 முதல் ஆக., 31 வரை அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்திருந்தது. ஊரடங்கு தளர்வால், தற்போதுதான் மக்கள் பணிக்கு திரும்புகின்றனர்.

எனவே, இன்னும் மூன்று மாதங்களுக்கு அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் வரி விதிப்பு வழங்க வேண்டும். இதன் மூலம், பொருட்களின் விலை குறைந்து மக்களுக்கான செலவினம் குறையும் எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.