முகப்பு
தமிழ்நாடு

சங்ககிரியில் திடீரென இடியுடன் கூடிய கனமழை

சேலம் மாவட்டம், சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென மேகம் திரண்டு மழை பெய்தது. மழை பெய்து கொண்டிருந்த போது சங்ககிரி மலை மேகங்களால் மறைக்கப்பட்டிருந்தன. 
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 

சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெப்பம் அதிகரித்து வந்தது. வெப்பம் அதிகரித்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக கோயில் நடைகள் சாத்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் குடும்பத்துடன் இரு சக்கர வாகனங்களில் சென்று வந்தனர்.

மாலையில் திடீரென குளிர்ந்தகாற்று வீசியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரம் பெய்தன. மாலையில் பணிகள் முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடுகளுக்கு திரும்ப இருந்த தொழிலாளர்கள் திடீர் மழையால் ஒதுங்க இடமில்லாமல் சிரமத்திற்குள்ளாகினர். தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றன. மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் மின் தடை ஏற்பட்டிருந்தன. மாலையில் குளிர்ந்த காற்று வீசிய வண்ணம் இருந்தன. சங்ககிரியில் திங்கள்கிழமை நள்ளிரவில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய 14 மில்லி மீட்டர் மழை பெய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →