முகப்பு
பேருந்து மோதியதில் 4 பேர் பலி; நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
தமிழ்நாடு

பேருந்து மோதியதில் 4 பேர் பலி; நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி அறிவித்த

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பேருந்து மோதியதில் 4 பேர் பலி; நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிக்கையில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், இலக்காபுரம் கிராமம், புதுவலசு என்னுமிடத்தில் வியாழக்கிழமை சிவகிரியிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதிய விபத்தில், குளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மோகம்புரி, அவருடைய மனைவி பொங்கி அம்மாள், சின்னுசாமி மகன் பாலசுப்ரமணி, பொன்னுசாமி மனைவி பார்த்தாள் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேற்கண்ட சாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட சாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →