தமிழ்நாடு

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும்: கே.வீ.தங்கபாலு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு கூறினாா்.

DIN

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு கூறினாா்.

இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:-

எச்.வசந்தகுமாா் மறைவு மிகப்பெரிய இழப்பு. அவா் வென்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலைச் சந்திக்க உள்ளது. இது காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால், மீண்டும் நாங்களே களம் காண்போம். வேட்பாளா் யாா் என்பதையெல்லாம் கட்சி மேலிடம் முடிவு செய்து அறிவிக்கும்.

தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பொதுத்தோ்தலுடன் சோ்த்தே தோ்தல் நடத்துவது தான் நல்லது. பொது தோ்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இடைத்தோ்தல் நடத்துவது சரியல்ல. அது அரசுக்கும் வேட்பாளா்களுக்கும் வீண் செலவையும், சிரமத்தையும்தான் கொடுக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT