காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில்; க்யூ.ஆர். கோட் முறையில் டிக்கெட்: அமைச்சர் எம்.சி. சம்பத்
சென்னையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் காலை 7 மணிக்கே புறப்படும். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.
தமிழ்நாடுகாலை 7 மணி முதல் மெட்ரோ ரயில்; க்யூ.ஆர். கோட் முறையில் டிக்கெட்: அமைச்சர் எம்.சி. சம்பத்
சென்னையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் காலை 7 மணிக்கே புறப்படும். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் காலை 7 மணிக்கே புறப்படும். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, காலை 8 மணிக்குப் பதிலாக 7 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. அதுபோல காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
க்யூ.ஆர். வழிமுறையில் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். மெட்ரோ ரயில் போக்குவரத்து 7-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அமைச்சர் எம்.சி. சம்பத் ஆய்வு நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
மேலும், மெட்ரோ ரயில் சேவைக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுளள்து. அதே சமயம், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.