10 நிமிடம் பானையின் மீது நின்று இரட்டைக் கம்பு சுழற்றி குழந்தை அசத்தல்!
தேசிய அளவில் ஆன்லைன் வழியாக நடைபெற்ற சிலம்பம் சுற்றும் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தேசிய அளவில் ஆன்லைன் வழியாக நடைபெற்ற சிலம்பம் சுற்றும் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கரோனா தொற்று காரணமாக சிசா ( SISA) ஸ்போர்ட் சார்பாக தேசிய அளவில் ஆன்லைன் வழியாக ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த நேதாஜி சிலம்பம் அகாடமி சார்பாக 3 வயது குழந்தை முதல் குடும்ப பெண்கள் வரை 75 பேர் பங்கேற்றனர்.
இதில் ஒரு பெண் குழந்தை பானை மீது 10 நிமிடம் நின்று இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தியது. ஒரு நிமிடத்தில் வேகமாக அதிக அளவு சிலம்பம் சுற்றும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் எனவும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.