தமிழ்நாடு

மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 11.735 கன அடியாக குறைந்தது

DIN


காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழைத் தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  ஞாயிற்றுக்கிழமை 11.735 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது. வெள்ளிக்கிழம் இரவு முதல் மழைத் தணிந்ததால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 17,790 கன அடியாக குறைந்தது

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அணைக்கு வரும் நீரின் அளவு 11.735 கன அடியாக குறைந்தது. அணையின் நீா்மட்டம்  91.02 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 54.1 டிஎம்சி ஆக உள்ளது. 

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்ததால், காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு  விநாடிக்கு 6,700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT