கண் தானம் செய்வதாக முதல்வர் பழனிசாமி உறுதி
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கண் தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:46 PM
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கண் தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.
நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி, முதல்வர் பழனிசாமி, கண் தானம் செய்வதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு அதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளார். அந்த சான்றிதழில் நேற்றைய தேதி (செப்.6) என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களிடையே கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் முன்னுதாரணமாக தனது கண்களை தானம் செய்வதாகக் கூறியுள்ளார்.
Advertisement