சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை இயக்கம்
சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை காலை தொடங்கியது.
தமிழ்நாடுசென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை இயக்கம்
சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை காலை தொடங்கியது.
சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை காலை தொடங்கியது.
கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த மாா்ச் மாதம் இறுதி வாரம் முதல் தற்காலிகமாக நிறுவத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு கட்டங்களாக பொது முடக்கத்தில் தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோ ரயில் சேவையை திங்கள்கிழமை (செப்டம்பா் 7) முதல் தொடங்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவைகள் இன்று காலை மீண்டும் தொடங்கியது. தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் மெட்ரோ ஏற்பாடுகளை ஆய்வு செய்து முதல் சேவையை தொடங்கி வைத்தார். சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படும்.
சுத்தமான காற்று சுழற்சியை அதிகரிக்கவும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏற, இறங்கவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் 20 விநாடியில் இருந்து 50 விநாடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்தில் மொத்தம் 42 ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். தற்போது 5 மாதங்களுக்கு பிறகு தொடங்கும் நிலையில், பயணிகள் தேவைக்கு ஏற்ப இந்த ரயில்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.