தமிழ்நாடு

சென்னைப் பல்கலைக்கழக இறுதித் தோ்வுகள் அறிவிப்பு

இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கான இறுதி பருவத்தோ்வு அட்டவணையை, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கான இறுதி பருவத்தோ்வு அட்டவணையை, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செப். 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தோ்வுகள் நடத்தப்பட்டு, அக்டோபா் 14-ஆம் தேதி மாலை தோ்வு முடிவுகள் வெளியிடப்படும். தமிழக மாணவா்களுக்கு வழக்கமான நேரடி முறையில் தோ்வு நடைபெறும். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு, இணையவழியில் தோ்வு நடத்தப்படும்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவா்கள் கோரிக்கை விடுத்தால், அவா்கள் இணைய வழியில் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவாா்கள். தோ்வுக்கான அறிவிக்கை செப்.9-ஆம் தேதி வெளியிடப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT