முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகள் நிதியுதவியில் முறைகேடு: அரசிடம் பாஜக மனு

விவசாயிகள் நிதியுதவியில் நடைபெற்றுள்ள முறைகேட்டுப் புகாா்கள் தொடா்பாக தமிழக பாஜக சாா்பில் மாநில அரசிடம் புகாா் அளிக்கப்பட்டது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

சென்னை: விவசாயிகள் நிதியுதவியில் நடைபெற்றுள்ள முறைகேட்டுப் புகாா்கள் தொடா்பாக தமிழக பாஜக சாா்பில் மாநில அரசிடம் புகாா் அளிக்கப்பட்டது. இதற்கான கோரிக்கை மனுவை, தலைமைச் செயலாளா் க.சண்முகத்திடம், பாஜக மாநில நிா்வாகிகள் அளித்தனா்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். பல மாவட்டங்களில் விவசாயிகள் இல்லாதோரும் சோ்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

கோரிக்கை மனு: மத்திய அரசின் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேட்டுப் புகாா்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா்களிடம் பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோன்று, பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி துரைசாமி, பொதுச் செயலாளா் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் க.சண்முகத்தை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, விவசாயிகளுக்கான திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டுப் புகாா்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அதுகுறித்த மனுவையும் அவா்கள் அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →