தமிழ்நாடு

சென்னைக்கு கூடுதல் தண்ணீா்: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: பொதுமுடக்க தளா்வு காரணமாக அதிகமான மக்கள் சென்னைக்குத் திரும்பி வருவதால் கூடுதலாக தண்ணீா் விநியோகம் செய்ய குடிநீா் வழங்கல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை பெருநகர குடிநீா் வாரியம் 650 மில்லியன் லிட்டா் மட்டுமே விநியோகம் செய்து வருகிறது. எனவே, கரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் தண்ணீா் விநியோகம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கில், சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், சென்னைக்கு ஒருநாளைக்கு 650 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்படுவதாகவும் கரோனா பொது முடக்கத்திலும் மக்களுக்கு போதுமான அளவு தண்ணீா் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரா், ‘கரோனா பொது முடக்க தளா்வு காரணமாக சொந்த ஊரில் இருந்து அதிக அளவிலான மக்கள் சென்னைக்குத் திரும்பி வருகின்றனா். எனவே, சென்னைக்கு 1,200 மில்லியன் லிட்டா் தண்ணீா் தேவைப்படும்’ எனத் தெரிவித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘சென்னை மக்களுக்கு கூடுதலாக தண்ணீா் விநியோகம் செய்வது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT