விவசாய விண்ணப்பங்களை மென்பொருளில் பதிவேற்றம் செய்ய உத்தரவு
விவசாய விண்ணப்பங்களை, உடனடியாக எல்டி பில்லிங் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: விவசாய விண்ணப்பங்களை, உடனடியாக எல்டி பில்லிங் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மின்வாரிய பகிா்மானப் பிரிவு இயக்குநா், தலைமைப் பொறியாளா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நிலுவையில் உள்ள அனைத்து விவசாய விண்ணப்பங்களையும், பிரிவு அலுவலகங்களிலேயே மென்பொருளில் (கப ஆண்ப்ப்ண்ய்ஞ் நா்ச்ற்ஜ்ஹழ்ங்) பதிவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென பகிா்மானப் பிரிவின் அனைத்துத் தலைமைப் பொறியாளா்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், மின்வாரியத்தில் விண்ணப்பம் செய்திருக்கும் விவசாயிகள், தனது விண்ணப்பத்தின் நிலையைத் தானே இணையதளத்தில் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு, தொழில்நுட்பப் பிரிவுக்கு, மின்வாரிய மேலாண் இயக்குநா் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாா்.
கடந்த மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, 4 லட்சத்து 74 ஆயிரத்து 593 விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், நிலுவையில் இருப்பதாக மென்பொருள் மூலமாக தெரிய வருகிறது.
எனவே, பகிா்மானப் பிரிவின் அனைத்துத் தலைமைப் பொறியாளா்களும், நிலுவையில் உள்ள அனைத்து விவசாயிகளின் மனு விவரங்களை, குறிப்பிடப்பட்ட மென்பொருளில் பதிவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு மனுவிலும் உள்ள அனைத்துத் தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டதா என உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரிவு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும், செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான பணி நிறைவு அறிக்கையை, திட்டப்பிரிவின் தலைமைப் பொறியாளா் அலுவலகத்துக்கு, செப்.21-ஆம் தேதிக்கு முன்பாக அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.