விழுப்புரத்தில் 398 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
விழுப்புரத்தில் ரூ.955 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளை முதல்வர் கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடுவிழுப்புரத்தில் 398 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
விழுப்புரத்தில் ரூ.955 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளை முதல்வர் கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.
விழுப்புரத்தில் ரூ.955 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளை முதல்வர் கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை தொடங்கிய விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, காவல் துறை, தாட்கோ, பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, இந்து சமய அறநிலை துறை ஆகிய 11 துறைகளின் சார்பில் ரூ.102.55 கோடி மதிப்பீட்டில் 1,508 முடிவற்ற திட்டப்பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, மீன்வளத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ. 836.80 கோடி மதிப்பீட்டில் 398 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்ந்த 6,427 பயனாளிகளுக்கு ரூ.15.95 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.