அரியர் தேர்ச்சி குறித்து முதல்வர் விளக்கம்
பல்கலைக்கழக மானியக் குழு நடைமுறைபடி தான் நடப்போம் என ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழு நடைமுறைபடி தான் நடப்போம் என ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை விழுப்புரத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் “தமிழகத்தில் பெற்றோரின் மனநிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.” என்றார்.
மேலும், “கரோனா பாதிப்பிலிருந்து படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும்.” என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Advertisement
தொடர்ந்து பேசிய அவர், “கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு தேர்ச்சி தொடர்பாக வேண்டுமென்றே தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் ஏற்கெனவே தமிழக அரசின் நிலையைத் தெளிவுபடுத்தி விட்டார். யூஜிசி நடைமுறைப்படி தான் நடப்போம் என முன்பே கூறியுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.
மேலும் நீட் விவகாரத்தைப் பொருத்தமட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நில்லைப்பாடு எனவும் உச்சநீதிமன்றம் வரை சென்றும் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்றும் தனது உரையில் முதல்வர் குறிப்பிட்டார்.