முகப்பு
தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் 171 நாள்களுக்குப் பின் மீண்டும் வாரச்சந்தை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் 171 நாட்களுக்குப்பின் மீண்டும் வாரச்சந்தை செயல்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
உத்தமபாளையத்தில் செயல்பட்ட வாரச்சந்தை
பகிர்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் 171 நாட்களுக்குப்பின் மீண்டும் வாரச்சந்தை செயல்பட்டது.

உத்தமபாளையம் பேரூராட்சியில் செயல்பட்ட வாரச்சந்தை புதன்கிழமை தோறும் செயல்படும். சந்தைக்கு சுற்றியுள்ள அனுமந்தன்பட்டி, க. புதுப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், கோகிலாபுரம், ராயப்பன்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கி செல்வார்கள். ஆனால், கரோனா ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 18ம் தேதிக்கு பின் 171 நாட்களாக செயல்படவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு பொது முடக்கத்தில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தமபாளையம் பேரூராட்சியில் மூடப்பட்டிருந்த வாரச்சந்தை இன்று புதன்கிழமை செயல்பட்டது. வழக்கமாக 250 கடைகளில்  கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின் 20 முதல் 30 கடைகளில் மட்டுமே வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்தனர் . அதேபோல பொது மக்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.