முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வு மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா(19) மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதி துர்கா
பகிர்:

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி துர்கா(18) மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். 

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருபவர் முருகசுந்தரம். இவர் 6 ஆவது பட்டாலின் படைப்பிரிவில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஜோதி துர்கா (18) கடந்த 2019 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வு எழுதினார். ஆனால் அவரால் தேர்ச்சி பெறமுடியவில்லை.

இதையடுத்து நடப்பாண்டு, நீட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று விட வேண்டும் என கடந்த ஒரு ஆண்டாக, படித்து வந்தார். இதற்காக நண்பர்களுடன் சேர்ந்த நாள்தோறும் கூட்டாகவும் தயாராகி உள்ளார்.

ஜோதி துர்கா தற்கொலை செய்வதற்கு முன் எழுதியுள்ள உருக்கமான கடிதம்.

செப்டம்பர் 13 ஆம் தேதி நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், நேற்று இரவு தனது தந்தையிடம் நீட் தேர்வில் இந்த ஆண்டும் வெற்றி பெற முடியாது, எனக் கூறி மன அழுத்தத்துடன் ஜோதிதுர்கா இருந்துள்ளார். சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் ஜோதிதுர்காவிற்கு காபி கொடுக்க சென்றபோது, அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த தல்லாகுளம் காவலர்கள்சம்பவ இடத்திற்குச் சென்று ஜோதி துர்கா சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதி துர்கா தற்கொலை செய்வதற்கு முன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். மேலும் விடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →