முகப்பு
தமிழ்நாடு

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது!

2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்படுகிறது.

Updated On : 16 மார்ச், 2026 at 9:35 AM
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
பகிர்:

2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற புத்தகத்துக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்திய அகாதெமி விருது கருதப்படுகிறது.

நாட்டின் அதிகாரப்பூர்வமான 24 மொழிகளில், கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு படைப்புகளில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மொழிகளில் எழுத்தாளர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்தது.

ஆனால், விருதுகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்ததால் அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால், செய்தியாளர்களுடனான சந்திப்பையும் சாகித்திய அகாதெமி நிர்வாகிகள் ரத்து செய்திருந்தனர். இன்று சாகித்திய அகாதெமி, அதிகாரப்பூர்வமாக விருது பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழில் 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதை, திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 (ஆய்வு நூல்) புத்தகத்துக்காக எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The Sahitya Akademi Award for 2025 will be presented to writerS. Tamilchelvan.

முழு கட்டுரையைப் படிக்க →