சென்னையில் கரோனா பாதிப்பு 
தமிழ்நாடு

கோடம்பாக்கம், அண்ணா நகரில் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில்: சென்னை மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,645 ஆகக் குறைந்துள்ளது. 

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,645 ஆகக் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. சென்னையிலும் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

சென்னையில் இதுவரை 1,47,591 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,959 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,33,987 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 10,645 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கோடம்பாக்கத்தில் 1,178 பேரும், அண்ணா நகரில் 1,055 பேரும், அம்பத்தூரில் 800 பேரும், அடையாறில் 793 பேரும், வளசரவாக்கத்தில் 900 பேரும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT