முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமாருக்கு கரோனா தொற்று

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார்
பகிர்:

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், களப்பணியில் உள்ள பல்வேறு மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இதன்தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமாருக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் இருக்கிறார். 

சமீபமாக தனது தொகுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →