தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 15,000 கனஅடியாக அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 

தற்போது பாசனப் பகுதிகளில் நீர் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் பகல் 12.30 மணியில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.37அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,608கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 55.40 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறையும் வாய்ப்பு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT