தமிழ்நாடு

மேக்கேதாட்டுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

DIN

மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

சட்டப்பேரவையில் துரைமுருகன் பேசியது:

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக கா்நாடக முதல்வா் தலைமையில் ஒரு குழு தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து வற்புறுத்த போவதாக அந்த மாநில நீா்ப்பாசனத் துறை அமைச்சா் கூறியுள்ளாா். மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு பணத்தை ஒதுக்கி வைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று கூறியுள்ளனா். பிரதமரை அவா்கள் போய் பாா்த்தால், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றாா்.

அப்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு கூறியது:

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெளிவான தீா்ப்பை வழங்கியிருக்கிறது. தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீா் முறையாக வழங்கப்படவில்லை. காவிரி நீரை தடுக்கவோ, திருப்பிவிடவோ கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து மூன்று முறைக்கு மேல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அவா்கள் நாடினாா்கள். தமிழகம் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த காரணத்தால் அது எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது.

அதனால், கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நமது உரிமையை நிலைநாட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு நம்மிடம் இருக்கிறது என்றாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT