தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,652 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 983 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 57 பேர் (அரசு மருத்துவமனை -34, தனியார் மருத்துவமனை -23) பலியானதாக இன்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8,559 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரேநாளில் மேலும் பேர் 5,768 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,64,668 பேர் குணமடைந்துள்ளனர். 46,633 பேர் (தனிமையில் உள்ளவர்கள் உள்பட) சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 84,567 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 61,33,399 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT