முகப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி மறைவு: முதல்வர் இரங்கல்

தமிழக அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு

அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி மறைவு: முதல்வர் இரங்கல்

தமிழக அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:21 PM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சரின் அன்பு சகோதரி திருமதி. வசந்தா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று(16.9.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

திருமதி. வசந்தா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். திருமதி வசந்தா அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →