நிதின் கட்கரி கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்
நிதின் கட்கரி கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிதின் கட்கரி கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கெனவே மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்ரீபாத் நாயக், தர்மேந்திர பிரதான், கைலாஷ் சௌதரி, அர்ஜுன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், சுரேஷ் அங்காடி ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில், நிதின் கட்கரி கரோனா பாதிப்பிலிருந்து விரைந்து நலம் பெற்று, பூரண உடல்நலன் பெற விரும்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.