முகப்பு
தமிழ்நாடு

ஒடிசாவில் புதிதாக 4,180 பேருக்குத் தொற்று: மேலும் 13 பேர் பலி

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
Odisha reports 4,180 new COVID-19 cases, 13 fresh fatalities
பகிர்:

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,180 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 13 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,180 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,71,347 ஆக அதிகரித்துள்ளது.

ஒடிசாவில் கடந்த நான்காவது நாளாக ஒருநாள் பாதிப்பு தொடர்ந்து 4,000-ஐ தாண்டியுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 37,140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1,33,466 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 48,146 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தமாக 26.67 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.