தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

DIN

தமிழகத்திலேயே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த சென்னையில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனாவுக்கு 9,874 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் வெறும் 6 சதவீதம்தான்.

சென்னையில் இதுவரை 1,52,567 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 92 சதவீதம் பேர் அதாவது 1,39,670 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 3,023 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக தொடர்ந்து அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று  வருகிறார்கள்.  குறைந்தபட்சமாக மணலியில் 120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT