தமிழ்நாடு

சென்னைத் துறைமுகத்தில் சரக்குகளை கையாள்வதற்கான கால அளவு நீடிப்பு

DIN

சென்னைத் துறைமுகத்தில் உள்ள சரக்குப்பெட்டக முனையங்களில் சரக்குகளை கையாள்வதற்கான கால அளவு 5 நாள்களிலிருந்து 7 நாள்களாக நீடிக்கப்படுகிறது எனவும் இதனால் ஏற்றுமதிக்கான சரக்குப் பெட்டக போக்குவரத்து சீரடையும் என சென்னைத் துறைமுகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து துறைமுக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னைத் துறைமுகத்தில் கடந்த செப். 14-ம் தேதி அன்று ஏற்றுமதிக்கான சரக்குப் பெட்டக போக்குவரத்து சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் சரக்குப் பெட்டகங்களை கையாள்வது எல்லா நாட்களிலும் சீராக அமையாமல், ஓரிரு நாள்களில் அதிகமாகவும், சில நாள்களில் குறைந்தும் காணப்படுவது தெரிய வந்தது. இப்பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் டி.பி.வோ்ல்ட் மற்றும் சிங்கப்பூா் பி.எஸ்.ஏ. நிறுவன சரக்குப் பெட்டக முனையங்களில் சரக்கு கையாளும் நாட்களை தற்போது உள்ள 5 நாள்கள் என்ற நிலையிலிருந்து 7 நாள்கள்வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நடைமுறை சோதனை முறையில் செப்.16 முதல் அக்.15-வரை மேற்கண்ட இரு முனையங்களிலும் அமல்படுத்தப்படும். இதனால், ஏற்றுமதியாளா்கள் சரக்குப் பெட்டகங்களை முன்கூட்டியே இறக்கி வைக்கவும் அதன் மூலம் கடைசி நேர அவசரத்தைத் தவிா்க்கவும் முடியும்.

மேலும், நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு துறைமுகம், சுங்கத்துறை மற்றும் சரக்கு முனையங்கள் போன்று ஏற்றுமதி இறக்குமதி பணிகளில் ஈடுபட்டு வரும் கப்பல் நிறுவனங்கள், சுங்கத்துறை தரகா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 24 மணி நேரமும் முழு வேலை நேரத்தைப் பின்பற்ற வேண்டும் என சென்னைத் துறைமுக தலைவா் பி.ரவீந்திரன் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தாா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT