முகப்பு
பொதுமுடக்க காலத்தில் திருச்சி காந்தி சந்தையில் திடீர் தீ  விபத்து
தமிழ்நாடு

திருச்சி காந்தி சந்தையில் திடீர் தீ  விபத்து

பொதுமுடக்க காலத்தில் திருச்சி காந்தி சந்தையில் நான்காவது முறையாக ஏற்பட்ட தீ விபத்தால் சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு

திருச்சி காந்தி சந்தையில் திடீர் தீ  விபத்து

பொதுமுடக்க காலத்தில் திருச்சி காந்தி சந்தையில் நான்காவது முறையாக ஏற்பட்ட தீ விபத்தால் சந்தேகம் எழுந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
பொதுமுடக்க காலத்தில் திருச்சி காந்தி சந்தையில் திடீர் தீ  விபத்து
பகிர்:


திருச்சி: பொதுமுடக்க காலத்தில் திருச்சி காந்தி சந்தையில் நான்காவது முறையாக ஏற்பட்ட தீ விபத்தால் சந்தேகம் எழுந்துள்ளது. 

திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியில் காந்தி சந்தை செயல்பட்டு வருகிறது. பொதுமுடக்கம் காரணமாக காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்படு பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.   

இந்நிலையில், சனிக்கிழமை காலை அங்குள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள 5 கடைகளில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த கண்டோன்மெண்ட்  தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  தீயை அணைத்தனர். 

கடைகள் பூட்டப்பட்டிருப்பதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. கடந்த ஆறு மாதத்தில் நான்காவது முறையாக இது போன்ற தீ விபத்து நடந்துள்ளது. இதை திட்டமிட்டு யாரேனும் செய்கிறார்களா? அல்லது  மின் கசிவு காரணமாக தான் நடந்ததா? என்பது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →