வைகை அணையிலிருந்து வரும் 27 முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து வரும் 27-ம் தேதி முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடுவைகை அணையிலிருந்து வரும் 27 முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து வரும் 27-ம் தேதி முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து வரும் 27-ம் தேதி முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6000 மி.க.அடி தண்ணீர் இருந்தால் பெரியாறு பாசனப் பகுதியில், ஒருபோக பாசன நிலங்களுக்கு, திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் சேர்த்து பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.
இதன்படி,பெரியாறு வைகைப் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கக்கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து 27.9.2020 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
இதனால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.