முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,337 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 22 செப்டம்பர், 2020 at 6:19 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:54 PM


தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,337 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,337 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 989 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,52,674 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 76 பேர் (அரசு மருத்துவமனை -44, தனியார் மருத்துவமனை -32) பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8,947 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 5,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,97,377 பேர் குணமடைந்துள்ளனர். 46,350 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் புதிதாக 2 தனியார் பரிசோதனை ஆய்வகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 66 அரசு பரிசோதனை ஆய்வகங்கள், 110 தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் என மொத்தம் 176 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.