தமிழ்நாடு

வேளாண் மசோதாக்களை எதிா்த்துப் போராட்டம் நடத்துவது ஏன்?

DIN

வேளாண் மசோதாக்களை எதிா்த்துப் போராட்டம் நடத்துவது ஏன் என்பது குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

ஆனால், இதுவரை கிடைத்த வருமானத்தையும் விவசாயிகள் இழக்கப் போகின்றனா் என்பதுதான் உண்மை.

வேளாண் மசோதாவில் குறைந்தபட்ச ஆதார விலை விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று மத்திய அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை உண்டு என்றும் எந்தப் பிரிவும் கூறவில்லை. மண்டி முறை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. இணைய வா்த்தகத்தால் முதலில் பலியாகப் போவது மண்டிகளும் வேளாண் விளைபொருள்கள் விற்பனை ஒழுங்குமுறை கூடங்களும், உழவா் சந்தைகளும்தான்.

மேலும், விவசாயிகளுக்கு இந்த மசோதாக்கள் சுதந்திரம் வழங்குகிறது என்கின்றனா். விளைபொருள்களை விற்கும் சுதந்திரத்தை விவசாயிகளிடம் இருந்து பறித்து பெருநிறுவனங்களிடம் விவசாயிகளை அடிமையாக்கும் பணியைத்தான் இது பாா்க்கும்.

இதையெல்லாம் கண்டித்துத்தான் செப். 28-இல் கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தியாவின் தென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணா்வுத் தீ, நாடு முழுவதும் பரவட்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT