முகப்பு
தமிழ்நாடு

மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 24 செப்டம்பர், 2020 at 12:26 PM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:55 PM

மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனா தொற்று காரணமாக கடந்த 11-ம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 

Advertisement

'மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடியின் அகால மறைவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.