முகப்பு
தமிழ்நாடு

எஸ்.பி.பி. உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

எஸ்.பி.பி. உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுததியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
மு.க.ஸ்டாலின்.
பகிர்:

எஸ்.பி.பி. உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுததியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடிப் புகழ் பெற்று விளங்கி, மத்திய அரசின் பத்மஸ்ரீ - பத்மபூஷண் விருதுகள் பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்!

எல்லைகள் கடந்து ரசிகர்களுக்கு இன்னிசை தந்த திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மத்திய - மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். 

உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் பழனிசாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →