பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ தோற்றிருப்பது தலைகுனிவு: மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ தோற்றிருப்பது தலைகுனிவு: மு.க. ஸ்டாலின்

சி.பி.ஐ. அதனை நிரூபிக்க முடியாமல் தோற்றிருப்பது இந்திய நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்டே இடித்துத் தள்ளப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னரும், சி.பி.ஐ. அதனை நிரூபிக்க முடியாமல் தோற்றிருப்பது இந்திய நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது” (the entire structure of the mosque was brought down in a calculated act of destroying a place of public worship) என்று பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும்; “பாபர் மசூதி இடிப்பு வழக்கினை - அதில் உள்ள குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல், சி.பி.ஐ. தோற்று இருப்பது, இந்திய நாடு பாதுகாத்திட வேண்டிய  சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

மசூதி மட்டுமல்ல; எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயத்திலும் அநியாயமாகும்; அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும். குற்றவழக்குகளில் - குறிப்பாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பைச் சீர்குலைத்த “பாபர் மசூதி” இடிப்பு வழக்கில் - நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., அப்படிச் செயல்பட ஏனோ தவறிவிட்டது வெட்கக் கேடானது. 

அரசியல் சட்டத்திற்கு நெருக்கடியை உருவாக்கிய ஒரு முக்கிய வழக்கில், பொறுப்பில்லாமல் ஏனோதானோ மனப்பான்மையுடன், சி.பி.ஐ. செயல்பட்டு - குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான தனது கடமைகளைத் துறந்திருப்பது, நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது அனைவருக்கும் ஆழ்ந்த கவலையைத் தருவதாகும் என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT