தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் மருத்துவ சேவைக்கு இலவச பேருந்து வசதி

DIN

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் அமைந்துள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனைக்கு பேருந்து நிலையத்திலிருந்து சென்று மருத்துவம் பார்த்து திரும்பும் வகையில் இலவச பேருந்து வசதி சேவையை எஸ்.பி.தெ.சண்முகப்பிரியா புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் சாலையில் கோனேரிக்குப்பத்தில் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையின் முதலாம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு மருத்துவமனைக்கு பலரும் வந்து திரும்பும் வகையில் இலவச பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து எஸ்.பி.தெ.சண்முகப்பிரியாவும், மருத்துவமனையின் தலைவர் பம்மல். எஸ்.விஸ்வநாதனும் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

மருத்துவமனையின் தலைமை நிர்வாக அலுவலர் பி. விஜயலெட்சுமி, மருத்துவர் பெருங்கோ, விமானப்படையிலிருந்து பணி ஓய்வு பெற்ற கமாண்டர் வி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பம்மல் சங்கரா கண் மருத்துவமனையின் பொது மேலாளர் கண்ணொளி பாபு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழா குறித்து சங்கரா பல்நோக்கு மருத்துவமனையின் தலைவர் பம்மல்.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், பள்ளிக் குழந்தைகளுக்காக அடிக்கடி இலவச கண் மருத்துவம் மற்றும் பல் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. அதேபோல கிராமப்புற ஏழைகளுக்காகவே இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. எனவே, மருத்துவச் சேவை பெற விரும்புவோருக்காக இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT