அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திப்போம்: அமைச்சர் சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் என அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திப்போம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் என அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திப்போம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 865 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கமும். ஆதரவும். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் என அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் களத்தை சந்திப்போம்.
மு.க. ஸ்டாலின் பச்சை கலர் துண்டு அணிந்தால் விவசாயியாக மாறி விட முடியாது. இன்று போய் சேற்றில் இறங்கி விட்டு விவசாயி என்றால் ஏற்க முடியாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து இன்றுவரை விவசாயம் செய்து வருகிறார்.
விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கத்தான் திமுகவினருக்கு தெரியும். அதிமுகவினரை ஊழல் வழக்குகளில் இருந்து பாஜக காப்பாற்றுவதாக கூறும் ஸ்டாலின், அவர்கள் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி வழக்கு விசாரணை, 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரண்டு லட்சம் கோடி ரூபாய் உலக மகா ஊழல் விசாரணை குறித்து, ஸ்டாலின் என்ன சொல்லப்போகிறார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.