திருப்பத்தூர்  ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் 
தமிழ்நாடு

திருப்பத்தூர்  ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

DIN

திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தின் 35-ஆவது மாவட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் உதயமானது.

இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நிலையில், புதன்கிழமை திருப்பத்தூர் வனச்சரகர் அலுவலகம் வளாகத்தில் உள்ள 14 ஏக்கரில்,சுமார் 27,376சதுர மீட்டர் பரப்பளவில்  109கோடியே 71லட்சம் ரூபாய் மதிப்பிலான  புதிய மாவட்ட ஆட்சியர்  அலுவலக பெருந்திட்ட  வளாகத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில்  திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சி.இ.தங்கையாபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளோம்: தலைமைத் தளபதி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT