முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி

​தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2020 at 6:44 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றிய அறிவிப்பை தமிழக சுகாதாரத் துறை இன்று (செவ்வாய்கிழமை) மாலை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய்த் தொற்றால் ஒருவர் பலியாகியிருப்பதன்மூலம், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

அதேசமயம், இன்று ஒரேநாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.