முகப்பு
தமிழ்நாடு

உடல் அடக்கத்தை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

கரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2020 at 12:49 PM
பகிர்:

கரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு வன்முறையில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அருகிலுள்ள வேலங்காடு இடுகாட்டில் பலத்த காவல்துறை  பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு மருத்துவரின் அடக்கம் செய்யப்பட்டது. 

இதையடுத்து, கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.