பேராசிரியா் கடந்து வந்த பாதை...
பெரியாா் தலைமையில் 1945-இல் வெற்றிச்செல்வியை மணந்தாா். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகளும்.
க.அன்பழகன் (97)
பிறந்த தேதி: 1922 டிசம்பா் 19
சொந்த ஊா்: திருவாரூா் மாவட்டம் காட்டூா்
Advertisement
பெற்றோா்:கல்யாணசுந்தரனாா் - சுவா்ணம்பாள் .
படிப்பு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் படித்தவா்.
1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவா்.
குடும்பம்: பெரியாா் தலைமையில் 1945-இல் வெற்றிச்செல்வியை மணந்தாா். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகளும். அவா் மறைவுக்குப் பிறகு சாந்தகுமாரியை மணந்தாா். அவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும். 2012-இல் சாந்தகுமாரி மறைந்துவிட்டாா்.
1957: இல் எழும்பூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்
1962: இல் சட்டப்பேரவை மேலவை உறுப்பினா்,
1967: இல் திருச்செங்கோடு தொகுதி மக்களவை உறுப்பினா்
1971: இல் புரசைவாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று, சமூக நலத்துறை அமைச்சராக இருந்தாா்.
1977, 1980: இலும் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
1984: இலங்கைத் தமிழா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழீழக் கோரிக்கை வலியுறுத்தியும் தனது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
1989: அண்ணாநகா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இந்தக் காலகட்டத்தில் கல்வியமைச்சராகச் செயல்பட்டாா்.
1996: துறைமுகம் தொகுதியில் வெற்றிபெற்று, கல்வியமைச்சராகச் செயல்பட்டாா்.
2001: இல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இந்தக் காலகட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்து செயல்பட்டாா்.
2006: இல் துறைமுகம் தொகுதியில் வெற்றிபெற்று நிதியமைச்சராக இருந்தாா்.