சென்னையில் 6 மண்டலங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில்..
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,577 ஆகக் குறைந்துள்ளது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,577 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், சென்னையில் தற்போது பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,000-க்கும் கீழ் குறைந்த நிலையில், தற்போது 13,000 -க்கும் மேல் அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 1,80,751 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,396 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,63,778 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 13,577 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோடம்பாக்கத்தில் 1,279 பேரும், அண்ணா நகரில் 1,399 பேரும், அம்பத்தூரில் 1,062 பேரும், அடையாறில் 1,086 பேரும், திருவிக நகரில் 1,224 பேரும், தேனாம்பேட்டையில் 1,336 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.