தமிழ்நாடு

காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி

DIN

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

விபத்து ஏற்பட்ட இடத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விபத்து நடந்த இடத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இடிபாடுகளுக்கு இடையில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

தொடர்ந்து, மீட்புப்பணியில் தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் அரசியல்

காதல் சரித்திரம்

ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்

வரப்பெற்றோம் (15-04-2024)

யாரும் அச்சப்பட வேண்டாம்: பெரிய திட்டங்களுடன் 3-வது முறை ஆட்சி -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT