சச்சின் விரைந்து நலம்பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின்
சச்சின் டெண்டுல்கர் கரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் கரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் கரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அலையினை விழிப்போடு எதிர்கொள்ளுமாறும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும் நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.