வருமான வரித்துறை சோதனை 
தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை காலை திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

DIN

சென்னை: திருவண்ணாமலையில் எ.வ.வேலு வீட்டில் நடந்த சோதனை தொடர்பான பேச்சு அடங்குவதற்குள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை காலை திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன்-சபரீசன் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

ஏற்கனவே திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 

வருமான வரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள், வருமான வரித்துறை அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

21 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஆலந்து தொகுதியில் வாக்குத் திருட்டு மூலம்தான் காங்கிரஸ் வென்றதா? பாஜக கேள்வி

இலங்கை உடன் பலப்பரீட்சை: வாழ்வா? சாவா? நிலையில் ஆப்கானிஸ்தான்!

புனிதா தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

SCROLL FOR NEXT